Sunday, June 2, 2013

வேண்டாத தீமை விடு (இருவிகற்ப நேரிசை வெண்பா)


சாதிவெறி நீங்கட்டும் சண்டையெலாம் ஓயட்டும்
நீதிநெறி வாழட்டும் நெஞ்சமெலாம் - மேதினியில்
தீண்டவொணார் மேற்குலத்தார் என்றுரைத்துச் சீரழிக்கும்
வேண்டாத தீமை விடு