1.
நெறியற்ற
நிறுவனங்கள் பேசும் பொய்கள்
அறிவுக்கு
வேலைதராப் பரிசுத் திட்டம்
வெறியூட்டிப்
பண்பாட்டைக் கெடுக்கும்
பாட்டு
தறிகெட்ட
வாழ்வுக்கா தொலைவின் காட்சி?
2.
கட்டிய
உடையினைக் களையும் காட்சியால்
ஒட்டிய
உதடுகள் உரசும் காட்சியால்
கட்டினில்
புரண்டிடும் காமக் காட்சியால்
கெட்டிடும்
இளமனம் போதும் கீழ்மையே
3.
பிறமொழிச்
சொற்களைப் பிணைத்த ஓசையை
நறவது
நிகர்தமிழ் பாடல் என்பது
நெறியது
நெறிசெலத் தூண்டும் கள்ளினை
அறிவிலி
உயிர்தரு அமுதம் என்பதாம்