களைத்துவரும்
மனிதர்க்கு நிழலைத் தந்து
களிப்படையச்
செய்வதுநல் இயற்கை ஆகும்
முளைத்திடுநல்
செடிகொடிநல் இயற்கை ஆகும்
முயல்மான்கள்
முதலான விலங்குக் கூட்டம்
திளைத்திடுநல்
லின்பத்தில் உள்ளம் சொக்கத்
தீங்குரலில்
பாடுகிற பறவைக் கூட்டம்
சளைத்தலின்றி
அழகுமிகு காட்சி தம்மைச்
சமைக்கின்ற
இயற்கைக்கு நிகரே யில்லை
No comments:
Post a Comment