வெள்ளியை
உருக்கி விடல்போல
வீழும்
வெள்ளி நீர்வீழ்ச்சி
துள்ளிடும்
மீனைப் போல்படகு
செல்லும்
தௌ;ளிய
நீரேரி
வெள்ளிய
மஞ்சாம் ஆடையினை
உடுத்தி
விளங்குது தூண்பாறை
அள்ளிடும்
மனத்தை மலர்தம்மின்
அழகே
அவ்வூர் கொடைக்கானல்