ஆர்வம்
கொண்டு செயல்படும் போது
அகிலம்
நம்மைப் போற்றிடுமே
சோர்வே
இன்றி உழைக்கும் போது
சுற்றும்
உலகம் நம்வசமே
வேர்வை
சிந்திப் பாடு பட்டால்
வெற்றிகள்
வந்து குவிந்திடுமே
நேர்மை
நமது கொள்கை என்றால்
நிச்சயம்
புகழ்நமைத் தேடிவரும்