Sunday, April 22, 2018

இவளும் பெண்தானோ?

இன்னும் சிற்சில நிமிடங்களில் தொடர்வண்டி கிளம்பப்போகிறது. பதிவுசெய்த இடங்களில் அவரவர் பெட்டிää பைகளோடு ஏறி அமர்ந்தனர். குழந்கைகள்ää இளசுகள்ää பெரியவர்கள்ää ஆம் ஒரு நிறைமாத கர்ப்பிணியும் இடங்களை நிரப்பி இருந்தனர். அந்த நிறைமாத கர்ப்பிணியுடன்ää தம்பி என்ற ஒரு இளைஞனும்ää அவளின் மூன்று வயதுப் பையனும் வந்து அமர்ந்தனர்ää அவளின் முகத்திதான் எத்தனை சோர்வு?

சென்னையிலிருந்து குருவாயூர் செல்லும் அந்த தொடர்வண்டியில்ää அவள் திருநெல்வேலி போவதாக அங்கிருந்த பெண்ணிடம் சொல்வது காதில் கேட்டது. பயணத்தில் மனம் ஒட்டாமல்ää பார்க்கும் மனிதர்களிடமும் பேசப்பிடிக்காமல் நான் அமர்ந்திருந்தேன். அவளின் மூன்று வயது மகள் “அம்மா நான் ஜன்னல் பக்கம் உட்காரனும்”ää என்று சொன்னபோதுää அவள் என் முகத்தைப் பார்த்தாள். நானும் சற்று விலகி அமரää குட்டிப்பயல் அருகே அமர்ந்தான். அவள் சிறு புன்முறுவலோடு என்னைப் பார்த்தபோதுää நானும் லேசாக முறுவலித்தேன்.

பயணம் தொடங்கி ஒருமணி நேரத்தில் செங்கல்பட்டு வந்தது. ஓரிரு நிமிடங்கள் வண்டி நின்று புறப்பட்டது. திருநங்கைகள் இருவர் கைதட்டியவாறுää காசுகேட்டுää ஆண்களின் தலையைத்தடவிää சட்டைப்பைகளில் கைவைத்து சில குறும்புகள் செய்தபோது எனக்கு எரிச்சல் ஏற்பட்டது. மனதுக்குள் ஒருவித கோபம் உண்டானது. பின் சற்று நேரத்தில் அவர்கள் நகர்ந்து போனார்கள். விழுப்புரம் நெருங்கும் போதுää அந்த கர்ப்பிணிப்பெண் எழுந்து அடிக்கடி கழிவறைக்குச் சென்று வந்தாள். பின் நிற்பதும்ää அமர்வதுமாக சற்று சிரமப்பட ஆரம்பித்தாள். உடன் வந்த பதினெட்டு வயதுத்தம்பி காதுகளில்ää வயர்களை மாட்டிக்கொண்டுää பாட்டுக்கேட்டுவாறு மேலே ஏறி படுத்துக் கொண்டான். எனக்குப் புரிந்ததுää அவளின் நிலை வலுத்து வருகிறது என்று. ஆனாலும் என்ன செய்வதென்று தெரியாமல் பதட்டமாக அவளைப்பார்த்தேன்.

தொடர்வண்டி விழுப்புரம் கடந்துää விருத்தாசலம் நோக்கிப் புறப்பட்டது. அவள் கண்களில் இப்போது கண்ணீர் வர ஆரம்பித்தது. பிற பயணிகள் அவரவர் தூங்கும் வசதி கொண்ட இருக்கைகளைப் போட்டு பாதிப்பேர் உறங்க ஆரம்பித்திருந்தனர்.
அப்போது திடீரென அவள் நின்ற இடம் முழுதும் நீர்கசிந்து நிறைந்துää நனைந்தது. அப்போது மீண்டும் அந்தத்திருநங்கைகளில் ஒருத்தி அங்கு வந்து நின்றாள்.

“உன்னை ஏறும்போதே பார்த்தேன்”ää ஏன் இன்னிக்கு பயணம் பண்ணனுமா?” “வீட்டிலே குந்த வேண்டியதுதானே? உனக்காகத் தான் நான் இங்க திரும்பவும் வந்தேன்”ää என்று அவள் சொல்லி முடிக்க “அம்மா”ää என்றவாறு அவள் குத்த வைத்தாள். சற்றும் எதிர்பாராமல் கண்விழித்த பிற பயணிகளும்ää நானும் அங்கிருந்து ஒதுங்குமாறுää அந்தத்திருநங்கை கூறää நாங்கள் சற்றும் எதிர்பாராத நிலையில் தான் கட்டியிருந்த காட்டன் சேலையை அவிழ்த்துää இரண்டு முழம் மட்டுமே கிழித்து அணிந்து கொண்டு மீதமுள்ள சேலையை லாவகமாக அந்தக் கர்ப்பிணியின் அடியில் தள்ளினாள்.

 பிறகு சிற்சில நிமிடங்களில்ää மற்ற பயணிகள் சற்றும் எதிர்பார்க்கும் முன் “ஞ்ஆ”… அழுகுரலுடன் அங்கு ஒரு உயிர் வெளிப்பட்டது. பயணிகள் ஓரிருவர் தாங்கள் வைத்திருந்த வெந்நீர் புட்டிகள்ää கத்தரிக்கோல் இத்தியாதிகள் கொடுத்து உதவää அந்தத் திருநங்கை பிரசவம் பார்த்து முடித்தாள். வண்டி அரியலூரில் நின்றபோதுää அவள் “இரயில்வே பாதுகாவலர்கள் உதவியுடன் உடல்நலம் கவனிக்கப்பட்டு………..

நான் எரிச்சலுடன் பார்த்த அந்தத்திருநங்கைää இப்போது எனக்குள் உயர்ந்து நின்றாள். சமுதாயம் புறக்கணிக்கும் இவளிடம் எத்தனை மனிதாபிமானம். இப்படியொரு உதவியை அவளால் எப்படிச் செய்ய முடிந்தது? பிள்ளை பெற்றவர்கள் (நானும்தான்) எல்லாம் திகைத்திருந்த வேளையில்ää முன்கூட்டியே அவள் முகக்குறிப்பறிந்து இந்தப் பெட்டிக்கு வந்துää உதவி புரிந்த இந்த நங்கையும் பெண்தானோ? ஆம் இவள் மிகவும் உயர்ந்த பெண்.

ஆணாகப்பிறந்த இவள் பெண்ணாகிää வாழ வழியறியாதுää இருந்தாலும் துணிவான மனமும்ää கூச்சமில்லாத அந்த நடவடிக்கையும்ää இரு உயிர்களைக் காப்பாற்றிய அந்த விவேகமும்…

இது ஒவ்வொரு பெண்ணிடமும் இருக்க வேண்டிய குணமல்லவா? இன்னும் என்னுள் வியப்பு அடங்கவில்லை.
-வனஜா பாண்டியன்

வைகையின் ஈரம்

வெள்ளிக்கிழமை காலை விடியும் போது வான்மதிக்கு கலக்கம். தூக்கக்கலக்கம்? இல்லையே! பின்? நாளை இந்தநேரம் கிளம்பியாக வேண்டும். எங்கு? சென்னைக்குத்தான். நேற்று மாலை முறுக்குச் சுட்டாச்சு. வத்தல் மல்லிப்பொடிகள் வடகம்… இன்றும் சில… ம்… விளையாட்டு சாமான்கள் ஒன்றிரண்டு எடுத்து வச்சாச்சு. இன்று போய் ஸ்வீட்கள் சில வாங்கவேண்டும். இந்த ஊரிலிருந்து பக்கத்து ஊருக்குப்போய் ‘டிரெய்ன்’ பிடிக்கனும் கலக்கம்… கலக்கம்…

முதுமை வந்தாச்சு. இளம் வயதில் வாடைää கோடை காலங்களைக் கண்டு அஞ்சியதில்லை. இரவு தாமதமாகத் தூங்கினாலும்ää விடியற்காலை முன்னதாக எழுந்து வேலை செய்தாலும் உற்சாகம் குறைந்ததில்லை.

மகனும்் மகளும் படிக்கும் வயதில் உடல் வலியோோ மனவலியோ பாதித்தாலும்் அதனை விரைவாகப் போக்கிவிட்டுு துறுதுறுப்பாக இயங்கிய நாட்கள் எத்தனை இன்பமானவை. கணவரிடம் சின்ன அல்லது பெரிய சண்டைகள் வந்தபோதும் ஓரிரு நாட்கள் அல்லது ஒருவாரத்தில் அது தொலைந்து போகும்.

பிள்ளைகள் வளர்ந்துு மணமாகி ஆளுக்கு ஒரு திசையில்் முக்கியமாக பரந்து நீண்டää நீரால் அடிக்கடி சு10ழப்பட்ட சென்னையில் வாழப்போன பின்?

ஒவ்வொரு வீட்டிலும்ää தெற்கே கன்னியாகுமரியிலிருந்து…… பிள்ளைகளைப் பார்க்கப்போய்க்கொண்டுää அந்த ஊரிலும் இருக்க முடியாமல்…. சொந்த ஊரிலும் நிரந்தரமாகத் தங்கமுடியாமல்…. எப்படிச்சொல்வது?

முக்கியமாக மதுரையிலிருந்து கிளம்பும் வைகை(லாரி) எக்ஸ்பிரஸில் செல்லும் முதியவர்கள்…. அல்லது சென்னையிலிருந்து திரும்பும் இதே கிழ உருவங்கள் படும் வேதனைகளை இதோ இந்த இளம் வயது மகன்கள்ää மகள்கள் புரிந்து கொள்ளாமல் இல்லை. ஓரிருநாட்கள் விடுமுறைக்கு வந்து விட்டுää எளிதாக டிக்கெட் கிடைக்கும் இதே வைகையில் அவர்கள் திரும்பும்போது இந்த முதியமுகங்களின் துயரங்களைப் பாப்பதுண்டு. அவர்களின் மூட்டைää முடிச்சுகளை ஊர்கள் வரும்போது ஏற்றி இறக்க உதவுவதோடு மட்டுமின்றிää அவர்களுக்கு சிறுசிறு உதவிகளையும் செய்வதுண்டு.

வான்மதி புரண்டு படுத்தாள். நாளைக்கு?.... மணி ஆறாகும்போது கிளம்பியாக வேண்டும்.

அவளுக்கும் ஒவ்வொரு மாதம் பயணத்திலும்ää தான் பெறாத மகன்கள் அல்லது மகள்கள் உதவுவதுண்டு.

இந்த வருடமும் மதுரைப்பக்கம் மழையே இல்லையே! இந்த வைகையில் கொஞ்சம் கூட ஈரம் இல்லையே! யாரோ அவள் பயணம் செய்யும்போது சொன்னார்கள்.

யார் சொன்னது வைகையில் ஈரம் இல்லையென்று? இன்று கூட இவள் வண்டி ஏறும்போது இளைஞன் ஒருவன் இவளிடம் “அம்மாச்சி’ää பையைக் கொடுங்க”… என்று வாங்கிää கட்டைப் பைச்சுமையை வண்டியில் ஏற்றி வைத்தான்.

இருக்கையில் அருகிருந்த பெண்மகள் ஒருத்திää (ஐ.வுயில் வேலை செய்பவளாம்) நான் கொஞ்ச நேரம் நிக்கிறேன். நீங்க காலை நீட்டிää ரிலாக்ஸ் பண்ணிக்கொள்ளுங்கள் என்று சொன்னாள். வான்மதி தனியாகப் பயணம் செய்தபோதும்…. இதோ ஈரம் இந்த வைகையில் இருக்கிறது. மழை இல்லாவிட்டாலும்ää தண்ணீர் இல்லா விட்டாலும். இந்த வைகை தினமும் ஓடுகிறது. இளநெஞ்சு ஈரங்கள் அன்பாக நனைத்து குளர்விக்கின்றன. இறக்கித் தந்துää சிறிது தூரம் தூக்கிவந்து…. வான்மதிக்கு பயணம் இன்னும் சில ஆண்டுகளுக்குச் சலிக்காது. “வைகையின் ஈரத்தால்”.
-வனஜா பாண்டியன்

நிழல் தரும் காதல்

நெரிசலான மாலை நேரம். பள்ளிகள் கல்லூரிகள் முடிந்து அலுவலகங்கள் சில முடிந்து வீடு திரும்பும் பலரையும் பரபரப்பாக்கும் மாலை நேரம்இ அருணாச்சலமும் தன் இருசக்கரவாகனத்தை தான் வேலைபார்க்கும் தபால் நிலையத்திற்கு அருகில் இருந்து நகர்த்தி கொண்டிருந்தான்.

 எதிரே நின்ற அவள்(ன்) இவனையே பார்ப்பது தெரிந்தது. பின் அதனை சட்டை செய்யாமல் வண்டியில் ஏறினான். அருணாசலத்தின் மனம் ஏனோ பாரமாகக் கனத்தது. இருபத்தொரு வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வரää அடிவயிறு கூட ஏதோ செய்தது. அன்று வெகுநேரம் கடந்தே அருணாச்சலம் தூங்கினான். மனைவியும்இ குழந்தைகளும் கேட்டபோது தலைவலிஇ உடல் அசதி என்று ஏதோ சொல்லிச் சமாளித்தான்.

 மறுநாள் மாலையும் அவன் இருசக்கர வாகனத்தை நகர்த்தியபோது சுற்றும் முற்றும் பார்த்தான். அவள்(ன்) நிற்பது சற்று தொலைவில் தெரிந்தது.

அருணாச்சலத்தின் நெஞ்சுபடபடக்கää உற்றுநோக்கினான் அவள்(ன்) சட்டென வேகமாக நடக்க ஆரம்பித்தாள்(ன்). அருணாச்சலம் வண்டியில் ஏறிää பின் தொடர்ந்தான். “நில்லுப்பா ஏய் நீ வேதா தானே? சட்டென நின்றாள் வேதா என்கிற முன் நாளைய வேதாச்சலம்.

“வந்து இல்லையே நீங்க யாரு?” என்றவளின் கண்களிள் கண்ணீர் ஊற்றெடுத்தது. அருணாச்சலம் வண்டியை விட்டு இறங்கினான்.

“என்னை எத்தனை நாளா நீ மறைந்திருந்து பார்த்துகிட்டு இருக்க”? என்று அருணாச்சலம் கேட்க வேதாவினால் கண்ணீரை அடக்கமுடியவில்லை. “அண்ணா நீ நல்லாருக்கியா? நீ எப்ப விழுப்புரத்துக்கு வந்த? உனக்குக் கல்யாணம் ஆயிருச்சா? அம்மாää அப்பா அக்கா எல்லாம் எப்படி இருக்காங்க?”

வேதாவின் கண்களில் அணை உடைந்து கண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. உடல் நடுக்கம் அதிகமானது. அருணாச்சலம் பதினெட்டு வயது இளைஞன். அவன் சகோதரிக்கு இருபத்தொரு வயது அவளுக்கு மாப்பிள்ளை பார்த்துக்கொண்டிருந்த நேரம். வேதாச்சலம் பதினாறு வயதைதொட்டான். (ஏற்கனவே பதினாங்கு வயது முதல் அவனுக்குள் தான் யாரென்று அவஸ்தைபட்டுவந்தான்.) தனக்குள் ஏற்பட்ட பெண்ணாகும் தன் உணர்வினை மெல்லத் தன் தாயிடம் சொன்னான். அவள் பதட்டம் பயம் தொற்றிக்கொள்ள கணவரிடம் அன்றிரவே கூறி அழத்தொடங்கினாள். வேதாச்சலம் இப்படிப்பெண் உணர்வு கொள்ளத்தொடங்கிய நாள் முதல் அவன் அக்கா சற்று அறிந்திருந்தாள். தன் வளையல்கள்ää ஆடம்பர மேக்கப் சாதனங்கள் இவற்றை அவன் விரும்பிப் பயன்படுத்தியபோது அவள் அதனை குற்றமாகக் கருதவில்லை. மாறாக எல்லோரையும் விட நல்ல நிறமாக இருந்த வேதாச்சலத்திற்கு அழகாக இருப்பதாகக் கூறுவாள். ஆனால் அதிலிருந்து அடிப்படையான உணர்வினை அவள் உள்ள10ர அறியவில்லை. தாயிடமோ வேறு யாரிடமோ கூறவில்லை. ஆனால் வேதாச்சலம் இப்போது இந்தப் பதினாறு வயதில் தன்னைப் பற்றி வெளிப்படையாகக் கூறியபோது வீட்டில் பூகம்பம் வெடித்தது.

இயல்பாகவே கோபக்காரரான அப்பாää அவன் அம்மா கூறி அழுத அந்த இரவிலேயே அழைத்து நன்கு அடித்துää மிரட்டி வைத்தார். வேதாச்சலம் மனது நொறுங்கிப்போனது. மதுரைக்கு அருகில் இருந்த சிற்றூரிலிருந்து அக்காவைப் பெண்பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வந்தனர். அன்று அக்கா தலைநிறைய பூச்சூடி பொட்டுவைத்துää வண்ண உடையணிந்து நகையணிந்து……. வேதாவின் மனம் அடக்க முடியாத ஆசையை அடைந்தது. வீட்டில் அனைவரும் உறங்கியப்பின்ää அன்றிரவே வேதாச்சலம் மாடி அறைக்குச் சென்று அறையைப்பூட்டி விட்டுää தன்னை அலங்கரித்து மகிழ்ந்தான். இவன் இப்படி நின்ற வேளைää அப்பா அங்கு வந்து நின்றார். தன் கையில் கொண்டுவந்திருந்த செருப்பால் அவனை நையப்புடைத்தார்.

 சுருண்டு விழுந்த வேதா ஒரு மூலையில் இரண்டு நாட்களாக அழுத வண்ணம் படுத்திருந்தான். அம்மாவும்ää அக்காவும்ää அண்ணனும் அவனை சமாதானம் செய்த போதும்ää “இனி இப்படி நடந்துக்காதேää லட்சணமா ஆம்பளைப் பிள்ளையாய் இரு” என்று சொன்னபோதுää வேதா தனுக்குள் ஒரு முடிவெடுத்தான். பின் மறுநாள் ஆண்மகனாகவே உடையணிந்து பள்ளி செல்வதாகக் கூறி வெளியேறியவன்ää வீட்டையும்ää தான் பிறந்த ஊரையும் விட்டு வெகுதூரம்… வெகுதூரம்… வெகுநாட்கள்…. ஆண்டுகள் என்று சென்றவன்… இன்று அண்ணன் முன் “வேதா” என்கிற திருநங்கையாக நிற்பது எத்தகைய ஒரு நிலையை அவளுக்கு ஏற்படுத்தி இருக்கும்?

ஒருவாரம் முன்பு தன் சகாக்களுடன் இருந்த போஸ்ட் ஆபீஸ் அருகே வந்தபோதுää அருணாச்சலத்தை பார்த்த வேதா தன் அண்ணன் முகத்தை எளிதில் கண்டுபிடித்துவிட்டாள். ஆனால் வேதாவைப் பார்த்த அருணாச்சலம் முதலில் கண்டுபிடிக்கவில்லை. என்றாலும் சிறுவயதில் காணாமல் போன தன் சகோதரன் வேதாச்சலத்தை அவன் நினைவிற்குக் கொண்டுவந்துää அவனும் இதுபோல் திருநங்கையாக இருப்பானோ என்று எண்ணிää பின் இன்று…….. “வேதா உன்னைப்பிரிந்த துயரில் நாங்கள் தவித்த நிலையில் அக்காவின் திருமணம் நடந்து முடிந்தது. பின் நான் படித்து முடித்து வேலைக்குச் சென்றேன். எனக்கும் மணம் முடிந்த ஓரிரு ஆண்டுகளில் அம்மா வெளிப்படுத்தாத துயரில் இதயம் தாங்காமல்  உலகை விட்டுச்சென்றுவிட்டாள். அப்பா உன்னைத் தேடவே கூடாது என்று கூறிய போதும்ää “வேதாää வேதா”  என்று உன்னை மெல்லிய குரலில் கூப்பிட்டுப்பார்த்தார். இரண்டு வருடங்கள் முன்பு வரை நடைபிணமாக வாழ்ந்த அவர்ää கிடைபிணமானார். எல்லாம் முடிந்து பின் எனக்கும் அந்த ஊரில் இருக்கப்பிடிக்கவில்லை. போஸ்ட் ஆபீஸ் வேலையில் இருந்த நான் மாற்றலாகி இங்கு வந்து ஒருமாதமாகிறது. “வேதா நீ எப்படி இருக்க? வேதாவின் அழுகை அடங்கியது”. இருக்கேன் என்னைப்போன்றவர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பதாக எண்ணி வாழ்கிறேன். எங்கள் உலகம் மிகவும் வித்தியாசமானது. இது துன்பமானதா? இன்பமானதா? சரியா? தவறா? இவையெல்லாம் நாங்கள் ஆராய்ச்சி செய்வதில்லை. வயிறு நிறைந்துää வண்ணமாக உடையணிந்துää மற்றவர்கள் (முக்கியமாக ஆண்கள்) எங்களை ரசிக்கும் போது மனமகிழ்ந்து விளையாட்டாக அல்லது வேதனையாக வாழ்ந்து கொள்கிறோம். பணத்தேவைகளுக்காக நாங்கள் படும்பாடு சொல்லமுடியாது”. படபடத்த வேதா தன் சகோதரி நங்கைகள் சற்று தூரத்தில் தனக்காக காத்திருப்பதைப் பார்த்துவிட்டு “சரி நான் வர்றேன்ää நாளை பார்க்கலாம்” என்றவாறே வேதா நகர்ந்து சென்றாள்.


பல நாட்கள் இவ்வாறு வேதாவும் அருணாச்சலமும் சந்தித்துக்கொண்டார்கள். ஒருநாள் அருணாச்சலம் வேதாவை வீட்டிற்கு அழைத்தான். வேதா வியப்புடன் நான் வந்தால் உன் மனைவிää பிள்ளைகள் என்னை எப்படிப்பார்ப்பாங்க? நீ உன் வாழ்க்கையை கெடுத்துக்காதே.” என்று சொன்னாள். “இல்லை வேதா உன் அண்ணி ரொம்ப நல்லவ. உன்னை வீட்டுக்குக் கூட்டிவரச் சொன்னதே அவள்தான்”.

வேதா மனமில்லாமல் அண்ணனுடன் சென்றாள். அண்ணி பரிமளா அவளை அன்புடன் வரவேற்றாள். அண்ணனின் மகனும்ää மகளும் அவளை அத்தை என்று அழைத்தபோது வேதாவிற்கு கூச்சமாகவுமää; மகிழ்ச்சியாகவும் இருந்தது. பின் அடிக்கடி வேதா அங்கு வந்து போனாள். பின் ஒரிரு நாட்கள் தங்கியும்ää பின் வாரம்ää மாதம் என்று தங்கிச்சென்றாள். அண்ணியின் அண்ணன் குமாரசாமியும் வேதா அங்கிருந்த நாட்களில் சிலநேரம் வந்துசெல்வார். அவர் சிறுவயது முதல் திருமணமே வேண்டாம் என்று வாழ்ந்தவர். (அவர் மனதில் இருந்த காரணம் ஒருபோதும் வெளிப்பட்டதில்லை.) இன்று ஐம்பதைக் கடந்த அவர் வேதாவின் பரிவான வார்த்தைகள்ää அண்ணி வேலைக்குச் சென்ற நாட்களில் குமாரசாமிக்கு சாப்பாடு போடுவது காப்பி தருவதுää சிலநேரங்களில் அவர் உடைகளை மடித்து வைத்து…. இப்படி பாசமாக சில செயல்களைச் செய்த போதுää அவள் பால் அன்பு கொள்ளச்செய்தது. வீட்டிற்கு அருகிலேயே தையல் கடை வைத்திருந்த குமாரசாமி பட்டன் தைப்பதுää இன்ன பிற வேலைகளையும் வேதாவிற்குக் கற்றுத்தரää ஒருவர் மற்றொருவரின் அன்புää ஆதரவினை அனுபவித்து மகிழ்ந்தார்கள்.

அருணாச்சலம் இதனை அறியாமல் இல்லை. அவனுக்கு பரிமளம் என்ன நினைப்பாளோää இதனால் மீண்டும் வேதாவை பிரிய நேருமோ என்று பயம் ஏற்படää அன்று மாலையே பரிமளத்திடம் பேச நினைத்தான்.

“என்னங்க நான் ஒன்னு சொல்வேன்ää நீங்க தப்பா எண்ணக்கூடாது” என்று பீடிகை போட்டபோது அருணாச்சலம் சற்றே ஆடிப்போனான்.
“என்ன பரிமளா? என்ன சொல்லப்போற? அவன் மனம் படபடக்கக் கேட்டான்”. “வந்து அண்ணனுக்கு ஐம்பது வயசாகுது. நம்பிள்ளைகளும் வளர்ந்துட்டாங்க. அதனால”…என்றவளை அருணாச்சலம் நிமிர்ந்து நோக்கினான். “நம்ம வேதாவை”….துணையாக வாழ வைச்சா என்னனு தோணுது.

அருணாச்சலத்திற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இது எப்படி சாத்தியம்? இருவரும் ஆண்கள் என்ற அடிப்படையில் பார்ப்பதா? அல்லது…. “இதை அவர்களிடம் கேட்போமே”  என்று சொன்னான்.

வேதாவும்ää குமாரசாமியும் இவர்களிடம் கலந்துரையாடியபோது அவர்கள் இப்படிச் சொன்னார்கள்.

“நாங்கள் மணம் புரிவது சட்டப்படி எங்கும் பதியமுடியாது. ஆனால் நாங்கள் ஒருவருக்கொருவர் நல்ல துணை. எங்கள் தேவைகளை நாங்கள் பார்த்துக் கொள்வோம். பகிர்ந்துகொள்வோம். துணையே வேண்டாம்;ää அல்லது அது சாத்தியமில்லை என்று எண்ணிய எங்களால் இன்று மனம் ஒத்து அன்புää பாசமுடன் வாழமுடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. எங்களுக்குக் குழந்தைகள் பிறக்காது. ஆனால் எங்களைப் போன்றவர்கள் இனிவரும் தலைமுறைகளுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டுவோம். பிறக்கும் விந்தையான உணர்வுகள் கொண்டவர்களும்ää இனி கௌரவமாக வாழவேண்டும். மனிதனே சட்டங்களைச் செய்தான். இனி இதுவும் மனங்களில் ஏற்றுக் கொள்ளப்படும் சட்டமாகட்டும் எங்கள் காதல் ஒருவருக்கொருவர் நிழலாகும் என்று பேசி முடித்தார்கள். பரிமளமும்ää அருணாச்சலமும் தங்கள் பிள்ளைகளை கட்டிக் கொடுத்தது போல் நிம்மதி அடைந்தார்கள்.
-வனஜா பாண்டியன்