1. அறத்தொடு பொருளை ஆய்ந்திட்ட
ஆன்றோர் வாழ்வில் ஒருபோதும்
பிறன்மனை தன்னை விரும்புகிற
பேதமை காணல் இயலாது
2. அறத்தின் வழுவி நின்றானை
அறிவிலி என்பார் உலகோர்கள்
பிறன்மனை விரும்பும் ஒருவனையோ
பேதையுள் பேதை என்பார்கள்
3. சிறந்த நண்பன் மனைவியினைச்
சிந்தை தன்னில் கொண்டவனை
இறந்தோன் என்றே உலகுரைக்கும்
இவனின் பேதையர் எவருமிலர்
4. தினையின் அளவும் ஆயாமல்
செல்வான் பிறன்மனை என்றால்பின்
பனையின் அளவு நலமெல்லாம்
படைத்தே இருந்தும் பயனில்லை
5. எளிது என்று இன்னொருவன்
இல்லாள் தன்னை நாடுபவன்
அழியாப் பழியை என்றென்றும்
அடைவான் என்பது நிச்சயமே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment