விடுதலை
உணர்வைத் தீப்போல
விளைத்தவன்
யார்?அவன்
பாரதியே
கெடுதல்
இல்லாச் சமுதாயம்
கிளைத்திடச்
செய்ததும் அவன்தானே?
அடுக்களைப்
பெண்களை ஆண்களொடு
அவனியில்
வலம்வரச் செய்ததனால்
உடுக்களை
நிகர்த்திடும் கவிஞருளே
உதிக்கும்
ஞாயிறு அவனாவான்
No comments:
Post a Comment