கிளைஞர்
எனநீ பிறரை எண்ணு
கிடைத்திடும்
பலரின் உறவுனக்கு
களைக
தீய இயல்புகள் தம்மைக்
காவியம்
கூடப் போற்றுமுனை
விளையும்
பற்பல நன்மைகள் எல்லாம்
வெற்றிகள்
உன்னைத் தேடிவரும்
இளைஞர்
சக்தி ஒன்றாய்ச் சேர்த்திடவே
இல்லை
எவரும் எதிர்த்திடவே