கணிப்பொறி என்னும் கருவியின் வரவால்
கணக்கிலா
விந்தைகள் காண்கிறோம்
இணைய
தளமது எங்குள பேரையும்
இணையச்
செய்திடும் இவ்வறி ஆழியில்
தாழ்ந்தபல்
அவலம் தகர்ந்தே மறைய
வாழ்ந்திடும்
வையகம் வளம்பல பெற்றே
விண்வெளி
என்னும் வீதியில் சென்று
வெண்ணில
வதனில் வீடுகள் கட்டுவர்
இயற்கைக்
கோள்கள் எல்லா வற்றிலும்
செயற்கைக்
கோள்கள் எல்லா வற்றிலும்
ஒவ்வொரு
கோளிலும் உலகவர் களித்திட
வௌ;வெறு
வகையில் வியத்தகு காட்சிகள்
காட்டிடும்
பற்பல கவின்மிகு நிலையம்
நாட்டுவர்
காணும் நானில மாந்தர்
இதுவரை
கண்டிலம் இத்தகு அரியவை
புதுவகை
இவற்றைப் புரிந்தவர் யாரெனத்
திகைத்திடும்
விதமாய்ச் செய்குவர் அதனால்
மிகைப்படும்
அவர்புகழ் மேதினி யதனில்
மண்ணுல
கதனில் மட்டுமே வாழ்பவர்
விண்வெளி
வாழ்வும் விழைவுடன் வாழ
எண்ணியே
செயல்படும் இளைஞர் தமக்கு
நண்ணிடும்
பெருமைகள் நலம்பல பெருகும்
வென்றிடும்
அவர்மதி விண்ணையும்
நின்றிடு
வார்அவர் நிலத்தவர் மனத்திலே!
(கோவை
வசந்தவாசல் கவிமாலையில்
வந்தது)
No comments:
Post a Comment