Saturday, March 14, 2009

அதிகாரம் 15 - பாடல்கள் 6 முதல் 10 வரை

6. பிறன்மனை நாடிச் செல்லுபவன்
பின்னர் அடைவான் பின்உள்ள
அறநெறி நீங்கிய பழி, பாவம்
அச்சம் பகையெனும் இவைநாங்கும்

7. அறமொடு பொருந்திய இல்வாழ்வை
அருமை யாக வாழுபவன்
பிறனுடை மனைவி தன்னுடைய
பெண்மை தன்னை விரும்பானே

8. பிறன்மனை தன்னை விரும்பாத
பெரிய ஆண்மை சான்றோர்க்கு
அறனெனும் உயர்நெறி தன்னோடு
ஆன்ற ஒழுக்கம் தனைநல்கும்

9. நன்மைக் குரியவர் யாரென்று
நாடின் கடல்நீர் சூழ்உலகில்
புன்மைக் குணமாம் பிறன்மனைதோள்
போயே தழுவா மேலோரே

10. அறத்தை எண்ணிப் பாராமல்
அல்ல செய்த போதினிலும்
பிறன்மனை தன்னின் ஈர்க்கின்ற
பெண்மை விரும்பாச் செயல்நன்றாம்

No comments: